Advertisement


இந்தியா–கத்தார் மோதல்: உலக கால்பந்து தகுதிச் சுற்றில்

நவம்பர் 20, 2023 21:47
 Comments  
 


FIFA World Cup Soccer 2026, Asian Qualification, India, Qatar
 

புவனேஸ்வர்: உலக கோப்பை கால்பந்து ஆசிய அணிகளுக்கான தகுதிச் சுற்றில் இன்று இந்தியா, கத்தார் அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்ய இந்திய அணி காத்திருக்கிறது.

கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் 2026ல் ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து 23வது சீசன் நடக்கவுள்ளது. இதற்கான ஆசிய அணிகள் பங்கேற்கும் தகுதிச் சுற்று, 5 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இரண்டாவது சுற்றில் 36 அணிகள், 9 பிரிவுகளாக விளையாடுகின்றன. இந்திய அணி ‘ஏ’ பிரிவில் கத்தார், ஆப்கானிஸ்தான், குவைத் அணிகளுடன் இடம் பிடித்துள்ளது. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறும். தவிர, 2027ல் நடக்கவுள்ள ஆசிய கோப்பைக்கும் தகுதி பெறலாம்.

 

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இன்று நடக்கும் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் ‘பிபா’ உலக தரவரிசையில் 102வது இடத்தில் உள்ள இந்திய அணி, 61வது இடத்தில் உள்ள கத்தார் அணியை எதிர்கொள்கிறது.

 

சமீபத்தில் குவைத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 1–0 என, குவைத் அணியை வென்றது. இப்போட்டியில் ஒரு கோல் அடித்த மன்விர் சிங் மீண்டும் கைகொடுக்கலாம். கேப்டன் சுனில் செத்ரி, கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து, சஹால் அப்துல் சமத், சந்தேஷ் ஜிங்கன் உள்ளிட்டோர் அசத்தினால், வெற்றி பெறலாம்.

 

தோகாவில் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானை 8–1 என்ற கணக்கில் வீழ்த்திய உற்சாகத்தில் கத்தார் அணி உள்ளது. இதில் 4 கோல் அடித்த அல்மோஸ் அலி மீண்டும் சாதிக்கலாம்.

 

சர்வதேச அரங்கில் இவ்விரு அணிகள் 3 முறை மோதின. இதில் 2ல் (1996, 2021) கத்தார் வென்றது.  2019ல் (செப். 10) இவ்விரு அணிகள் மோதிய உலக கோப்பை (2022) தகுதிச் சுற்றுப் போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது. இதனால் இன்றைய போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?