உலக கோப்பை தொடரின் பைனலில் இந்திய அணி செய்த பல தவறுகள் கோப்பை கனவை தகர்த்தது.
* ஆடுகளம் மந்தமாக இருந்த நிலையில், சிராஜ் இடத்தில் அஷ்வினை சேர்க்காமல் மீண்டும் தவறு செய்தார் ரோகித்.
* முதலில் பேட் செய்த இந்தியாவுக்கு ரோகித் வேகமான துவக்கம் தந்தார். மந்தமான ஆடுகளத்தில் கோலி, ராகுல் இணைந்து ‘செட்டில்’ ஆன பின்பும் ரன் சேர்க்க திணறினர். ‘மிடில் ஓவர்களில்’ பவுண்டரிகளே வரவில்லை. கடைசி 40 ஓவரில் 4 பவுண்டரி தான் அடிக்கப்பட்டன. ஆனால் ஹெட், லபுசேன் பேட் செய்த போது, ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறி இருந்தது.
* பந்துவீச்சில் முதல் 3 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தி நம்பிக்கை தந்தனர். ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தும் வகையில் தாக்குதல் பாணியிலான ‘பீல்டிங்’ அமைக்காமல் ரோகித் கோட்டை விட்டார்.
* இரவில் அதிகமான பனிப்பொழிவு காரணமாக பந்தில் அதிக ஈரப்பதம் ஏற்படும். குல்தீப், ஜடேஜா என பந்தை சுழற்ற மிக சிரமப்பட்டனர். இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் எளிதாக ரன் சேர்த்து, மீண்டனர்.
கோப்பை அவமதிப்பா
ஆஸ்திரேலிய அணி வென்ற உலக கோப்பை மீது தனது இரு கால்களை வைத்து ‘போஸ்’ கொடுத்து சர்ச்சையில் சிக்கினார் மிட்சல் மார்ஷ். இவரது செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளன. ‘உலக கோப்பை வெல்ல தகுதியான அணி ஆஸ்திரேலியா தான். ஆனால் மார்ஷ் செயல் மோசமானது,’ என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.