ஒரு இன்னிங்சில் அதிக ரன் விளாசிய வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் முதலிடம் பிடித்தார். மும்பையில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அசத்திய இவர் 128 பந்தில் 201 ரன் (10 சிக்சர், 21 பவுண்டரி) எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
‘டாப்–5’ வீரர்கள்
வீரர்/நாடு ரன் எதிரணி இடம்
மேக்ஸ்வெல்/ஆஸி., 201* ஆப்கானிஸ்தான் மும்பை
மார்ஷ்/ஆஸி., 177* வங்கதேசம் புனே
குயின்டன்/தெ.ஆ., 174 வங்கதேசம் மும்பை
வார்னர்/ஆஸி., 163 பாகிஸ்தான் பெங்களூரு
கான்வே/நியூசி., 152* இங்கிலாந்து ஆமதாபாத்
765
அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் கோலி முதலிடம் பிடித்தார். இவர் 11 போட்டியில், 3 சதம், 6 அரைசதம் உட்பட 765 ரன் எடுத்தார்.
‘டாப்–5’ வீரர்கள்
வீரர்/நாடு போட்டி ரன் சதம்
கோலி/இந்தியா 11 765 3
ரோகித்/இந்தியா 11 597 1
குயின்டன்/தெ.ஆ., 10 594 4
ரச்சின்/நியூசி., 10 578 3
மிட்செல்/நியூசி., 10 552 2
* ஒரு உலக கோப்பை தொடரில் அதிக ரன் குவித்த வீரரானார் கோலி. இதற்கு முன் 2003ல் நடந்த தொடரில் இந்திய ஜாம்பவான் சச்சின் 11 போட்டியில் 673 ரன் எடுத்தது அதிகபட்சமாக இருந்தது.
24
அதிக விக்கெட் சாய்த்த பவுலர்கள் பட்டியலில் இந்தியாவின் முகமது ஷமி முதலிடத்தை தட்டிச் சென்றார். இவர், 7 போட்டியில் 24 விக்கெட் வீழ்த்தினார். மூன்று முறை, ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றினார்.
‘டாப்–5’ பவுலர்கள்
வீரர்/நாடு போட்டி விக்கெட்
ஷமி/இந்தியா 7 24
ஜாம்பா/ஆஸி., 11 23
மதுஷங்கா/இலங்கை 9 21
பும்ரா/இந்தியா 11 20
கோயட்சீ/தெ.ஆ., 8 20
644
இம்முறை 644 சிக்சர் பதிவானது. அதிக சிக்சர் பறக்கவிட்ட வீரர்களுக்கான வரிசையில் இந்தியாவின் ரோகித் முதலிடத்தை கைப்பற்றினார். இவர், 11 போட்டியில், 31 சிக்சர் விளாசினார்.
‘டாப்–5’ வீரர்கள்
வீரர்/நாடு போட்டி சிக்சர்
ரோகித்/இந்தியா 11 31
ஸ்ரேயாஸ்/இந்தியா 11 24
வார்னர்/ஆஸி., 11 24
மேக்ஸ்வெல்/ஆஸி., 9 22
மிட்செல்/நியூசி., 10 22
11
ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில் பாகிஸ்தானின் பகார் ஜமான் முதலிடம் பிடித்தார். பெங்களூருவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இவர் 11 சிக்சர் விளாசினார். அடுத்த இடத்தைஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் (10 சிக்சர், எதிர்: ஆப்கானிஸ்தான், மும்பை) கைப்பற்றினார்.
7
ஒரு இன்னிங்சில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த பவுலரானார் இந்தியாவின் ஷமி. மும்பையில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் ‘வேகத்தில்’ மிரட்டிய இவர் 9.5 ஓவரில் 57 ரன் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் சாய்த்தார். அடுத்த இடத்திலும் ஷமி (5 ஓவர், 18 ரன், 5 விக்கெட், எதிர்: இலங்கை, மும்பை) உள்ளார்.
20
அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்ட கீப்பர் பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக் முதலிடம் பிடித்தார். இவர், 10 போட்டியில், 19 ‘கேட்ச்’, ஒரு ‘ஸ்டெம்பிங்’ என 20 விக்கெட் வீழ்ச்சிக்கு உதவினார். அடுத்த மூன்று இடங்களை இந்தியாவின் ராகுல் (17), ஆஸ்திரேலியாவின் இங்லிஸ் (16), நெதர்லாந்தின் ஸ்காட் எட்வர்ட்ஸ் (15) கைப்பற்றினர்.
40
இம்முறை 40 சதம் பதிவானது. தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக் அதிகபட்சமாக 4 சதம் விளாசினார். இந்தியாவின் கோலி, நியூசிலாந்தின் ரச்சின் ரவிந்திரா தலா 3, இந்தியாவின் ஸ்ரேயாஸ், ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல், மிட்சல் மார்ஷ், வார்னர், ஹெட், நியூசிலாந்தின் டேரில் மிட்செல், தென் ஆப்ரிக்காவின் வான் டெர் துசென் தலா 2 சதம் அடித்தனர்.
2239
மொத்தம் 2239 பவுண்டரி அடிக்கப்பட்டது. அதிக அரைசதம் விளாசிய வீரர்கள் வரிசையில் இந்தியாவின் கோலி முதலிடம் பிடித்தார். இவர் 11 போட்டியில் 6 அரைசதம் அடித்தார். இந்தியாவின் சுப்மன் கில், பாகிஸ்தானின் பாபர் ஆசம், இலங்கையில் பதும் நிசங்கா தலா 4 அரைசதம் பதிவு செய்தனர்.
11
அதிக ‘கேட்ச்’ செய்த பீல்டர்கள் வரிசையில் நியூசிலாந்தின் டேரில் மிட்செல் முதலிடம் பிடித்தார். இவர் 10 போட்டியில், 11 ‘கேட்ச்’ செய்தார். அடுத்த நான்கு இடங்களை ஆஸ்திரேலியாவின் லபுசேன் (8 ‘கேட்ச்’), வார்னர் (8), இந்தியாவின் ஜடேஜா (7), தென் ஆப்ரிக்காவின் டேவிட் மில்லர் (7) தட்டிச் சென்றனர்.
273
எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன் சேர்த்த ஜோடிகள் வரிசையில் நியூசிலாந்தின் ரச்சின்–கான்வே முதலிடம் பிடித்தனர். ஆமதாபாத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 2வது விக்கெட்டுக்கு இணைந்த இவர்கள் 273 ரன் சேர்த்தனர். அடுத்த இரு இடங்களை ஆஸ்திரேலியாவின் வார்னர்–மிட்சல் மார்ஷ் (259 ரன், முதல் விக்கெட், எதிர்: பாகிஸ்தான், பெங்களூரு), இந்தியாவின் ராகுல்–ஸ்ரேயாஸ் (208 ரன், 4வது விக்கெட், எதிர்: நெதர்லாந்து, பெங்களூரு) கைப்பற்றினர்.
7ஒரு இன்னிங்சில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த பவுலரானார் இந்தியாவின் ஷமி. மும்பையில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் ‘வேகத்தில்’ மிரட்டிய இவர் 9.5 ஓவரில் 57 ரன் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் சாய்த்தார். அடுத்த இடத்திலும் ஷமி (5 ஓவர், 18 ரன், 5 விக்கெட், எதிர்: இலங்கை, மும்பை) உள்ளார்.
20
அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்ட கீப்பர் பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக் முதலிடம் பிடித்தார். இவர், 10 போட்டியில், 19 ‘கேட்ச்’, ஒரு ‘ஸ்டெம்பிங்’ என 20 விக்கெட் வீழ்ச்சிக்கு உதவினார். அடுத்த மூன்று இடங்களை இந்தியாவின் ராகுல் (17), ஆஸ்திரேலியாவின் இங்லிஸ் (16), நெதர்லாந்தின் ஸ்காட் எட்வர்ட்ஸ் (15) கைப்பற்றினர்.
40
இம்முறை 40 சதம் பதிவானது. தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக் அதிகபட்சமாக 4 சதம் விளாசினார். இந்தியாவின் கோலி, நியூசிலாந்தின் ரச்சின் ரவிந்திரா தலா 3, இந்தியாவின் ஸ்ரேயாஸ், ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல், மிட்சல் மார்ஷ், வார்னர், ஹெட், நியூசிலாந்தின் டேரில் மிட்செல், தென் ஆப்ரிக்காவின் வான் டெர் துசென் தலா 2 சதம் அடித்தனர்.
2239
மொத்தம் 2239 பவுண்டரி அடிக்கப்பட்டது. அதிக அரைசதம் விளாசிய வீரர்கள் வரிசையில் இந்தியாவின் கோலி முதலிடம் பிடித்தார். இவர் 11 போட்டியில் 6 அரைசதம் அடித்தார். இந்தியாவின் சுப்மன் கில், பாகிஸ்தானின் பாபர் ஆசம், இலங்கையில் பதும் நிசங்கா தலா 4 அரைசதம் பதிவு செய்தனர்.
உலக ஸ்டேட்ஸ்–2
428**
அதிக ரன் குவித்த அணிகளுக்கான வரிசையில் தென் ஆப்ரிக்கா முதலிடம் பிடித்தது. டில்லியில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 428 ரன் குவித்தது. அடுத்த இரு இடங்களை இந்தியா (410/4, எதிர்: நெதர்லாந்து, பெங்களூரு), நியூசிலாந்து (401/6, எதிர்: பாகிஸ்தான், பெங்களூரு) அணிகள் கைப்பற்றின.
309
அதிக ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்த அணிகளுக்கான வரிசையில் ஆஸ்திரேலிய முதலிடத்தை தட்டிச் சென்றது. டில்லியில் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 309 ரன் வித்தியாசத்தில் வென்றது. அடுத்த இரு இடங்களை இந்திய அணி (302 ரன்–எதிர்: இலங்கை, 243 ரன்–எதிர்: தென் ஆப்ரிக்கா) கைப்பற்றியது.
771
தர்மசாலாவில் ஆஸ்திரேலியா (388), நியூசிலாந்து (383) அணிகள் மோதிய போட்டியில் அதிகபட்சமாக 771 ரன் பதிவானது. இதனையடுத்து தென் ஆப்ரிக்கா – இலங்கை (754 ரன், டில்லி), இந்தியா – நியூசிலாந்து (724 ரன், மும்பை) அணிகள் மோதிய போட்டியில் அதிக ரன் குவிக்கப்பட்டது.
3
ஒருநாள் போட்டி அரங்கில் இந்தியாவின் சுப்மன் கில், ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் ‘வேகத்தில்’ 3வது முறையாக அவுட்டானார்.
‘ஜெர்சி’ பரிசு
இந்திய வீரர் கோலி, சமீபத்தில் ஒருநாள் அரங்கில் 50 வது சதம் விளாசி, சச்சினை (49) முந்தினார். இவரை பாராட்டும் வகையில் தனது கடைசி ஒருநாள் போட்டியில் (2012, மார்ச் 18, பாக்.,) அணிந்திருந்த ஜெர்சியை, நேற்று பைனல் துவங்கும் முன் பரிசாக வழங்கினார். ‘நம்பர்–10’ எண் பொறிக்கப்பட்ட இதில் சச்சினின் ‘ஆட்டோகிராப்’ இருந்தது.
20 விமானம்
பல்வேறு தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், பாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட பல வி.ஐ.பி.,க்களுக்காக குறைந்தது 20 தனி விமானங்கள் ஆமதாபாத் வந்திறங்கின.
70,000
பைனலுக்கான டிக்கெட் வாங்கியவர்களில் குறைந்தது 70,000 பேர், குஜராத் மாநிலத்தை சேராதவர்கள். இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்தும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளில் இருந்து ‘பறந்து’ வந்த ரசிகர்கள் தான் அதிகம்.