* ஒரு உலக கோப்பை தொடரில் அதிக ரன் எடுத்த வீரர்கள் வரிசையில் இந்திய ஜாம்பவான் சச்சினை (673 ரன், 2003) முந்தினார் சகவீரர் கோலி (765 ரன், 2023).
* அதிக சதம் விளாசிய வீரர்கள் வரிசையில் சச்சினை (6) முந்தி முதலிடம் பிடித்தார் இந்திய கேப்டன் ரோகித் (7 சதம்).
* அதிக ரன் குவித்த அணிகளுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியாவை (417/6 ரன், எதிர்: ஆப்கன், 2015) முந்தியது தென் ஆப்ரிக்கா (428/5, எதிர்: இலங்கை, 2023).
* அதிக சிக்சர் பறக்கவிட்ட வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் கெய்லை (49) முந்தினார் இந்தியாவின் ரோகித் (54).
* அதிகவேக சதம் விளாசிய வீரர்கள் வரிசையில் தென் ஆப்ரிக்காவின் மார்க்ரம் (49 பந்து, எதிர்: இலங்கை, 2023) சாதனை முறியடித்தார் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் (40 பந்து, எதிர்: நெதர்லாந்து, 2023).
* அதிக ரன்னை ‘சேஸ்’ செய்த (345 ரன், எதிர்: இலங்கை, 2023) அணிகளுக்கான வரிசையில் முதலிடம் பிடித்தது பாகிஸ்தான். இதற்கு முன் அயர்லாந்து அணி அதிக ரன்னை (329 ரன், எதிர்: இங்கிலாந்து, 2011) விரட்டியது.
* ஒரு இன்னிங்சில் அதிக ரன்னை விட்டுக்கொடுத்த பவுலர்களுக்கான பட்டியலில் நெதர்லாந்தின் பாஸ் டி லீட் (115 ரன், 10 ஓவர், 2 விக்கெட், எதிர்: ஆஸ்திரேலியா, 2023) முதலிடம் பிடித்தார். இதற்கு முன் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (110 ரன், 9 ஓவர், 0 விக்., எதிர்: இங்கிலாந்து, 2019) முதலிடத்தில் இருந்தார்.
2003க்கு பின்...
2003ல் நடந்த உலக கோப்பை தொடரில் அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சச்சின் (673 ரன்) முதலிடம் பிடித்தார். பைனலில் இந்தியா தோற்றது. இம்முறை அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் கோலி (771) முதலிடத்தை கைப்பற்றினார். பைனலில் இந்தியா தோல்வியை தழுவியது. 2011ல் இந்தியா கோப்பை வென்ற போது இலங்கையின் ஜெயவர்தனா (500) அதிக ரன் எடுத்திருந்தார்.
765
அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் கோலி முதலிடம் பிடித்தார். இவர் 11 போட்டியில், 3 சதம், 6 அரைசதம் உட்பட 765 ரன் எடுத்தார்.
‘டாப்–5’ வீரர்கள்
* ஒரு உலக கோப்பை தொடரில் அதிக ரன் குவித்த வீரரானார் கோலி. இதற்கு முன் 2003ல் நடந்த தொடரில் இந்திய ஜாம்பவான் சச்சின் 11 போட்டியில் 673 ரன் எடுத்தது அதிகபட்சமாக இருந்தது.
201
ஒரு இன்னிங்சில் அதிக ரன் விளாசிய வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் முதலிடம் பிடித்தார். மும்பையில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அசத்திய இவர் 128 பந்தில் 201 ரன் (10 சிக்சர், 21 பவுண்டரி) எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
‘டாப்–5’ வீரர்கள்
24
அதிக விக்கெட் சாய்த்த பவுலர்கள் பட்டியலில் இந்தியாவின் முகமது ஷமி முதலிடத்தை தட்டிச் சென்றார். இவர், 7 போட்டியில் 24 விக்கெட் வீழ்த்தினார். மூன்று முறை, ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றினார்.
‘டாப்–5’ பவுலர்கள்
644
இம்முறை 644 சிக்சர் பதிவானது. அதிக சிக்சர் பறக்கவிட்ட வீரர்களுக்கான வரிசையில் இந்தியாவின் ரோகித் முதலிடத்தை கைப்பற்றினார். இவர், 11 போட்டியில், 31 சிக்சர் விளாசினார்.
11
ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில் பாகிஸ்தானின் பகார் ஜமான் முதலிடம் பிடித்தார். பெங்களூருவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இவர் 11 சிக்சர் விளாசினார். அடுத்த இடத்தைஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் (10 சிக்சர், எதிர்: ஆப்கானிஸ்தான், மும்பை) கைப்பற்றினார்.