புதுடில்லி: டென்னிஸ் வீராங்கனை கர்மான் கவுர் தண்டி, ஹாக்கி வீரர் குர்ஜந்த் சிங் திருமணம் நடந்தது.
இந்திய டென்னிஸ் வீராங்கனை கர்மான் கவுர் தண்டி 25. ஒற்றையர் பிரிவில் ஐ.டி.எப் அரங்கில் 3, இரட்டையரில் டபிள்யு.டி.ஏ., தொடரில் 1, ஐ.டி.எப்., அரங்கில் 4 என சர்வதேச அரங்கில் இதுவரை 8 கோப்பை வென்றுள்ளார். ஒற்றையர் தரவரிசையில் தற்போது 211 வது இடத்திலுள்ளார்.
இதுபோல 2021ல் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஹாக்கி அணியில் இடம் பெற்றவர் குர்ஜந்த் சிங் 28. கடந்த 2016 ல் ஜூனியர் உலக கோப்பை தொடரில் அசத்திய இவர், தற்போது இந்திய அணியின் முக்கிய வீரராகி உள்ளார்.
இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. இதுதொடர்பான போட்டோக்களை இணையதளத்தில் பகிர்ந்து கொண்டனர்.