டான்டெரிட்: ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் இரட்டையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி முன்னேறியது.
சுவீடனில் ஆண்களுக்கான ஏ.டி.பி., சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி, டென்மார்க்கின் ஜோகனஸ் இங்கிலிட்சென், பின்லாந்தின் ஈரோ வாசா ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 6–4 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, ‘டை பிரேக்கர்’ வரை சென்ற இரண்டாவது செட்டை 7–6 என தன்வசப்படுத்தியது. முடிவில் ஜீவன், விஜய் சுந்தர் ஜோடி 6–4, 7–6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.