டுரின்: ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் எப்டென் ஜோடி தோல்வியடைந்தது.
இத்தாலியின் டுரின் நகரில் ஆண்களுக்கான ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டென் ஜோடி, ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ், அர்ஜென்டினாவின் ஹோராசியோ செபாலோஸ் ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை 5–7 என இழந்த போபண்ணா ஜோடி, இரண்டாவது செட்டை 4–6 எனக் கோட்டைவிட்டது. ஒரு மணி நேரம், 20 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய போபண்ணா, எப்டென் ஜோடி 5–7, 4–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.