சிங்கப்பூர் சிட்டி: சிங்கப்பூர் ஓபன் ஸ்குவாஷ் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சவுரவ் கோசல், ரமித் டான்டன் தோல்வியடைந்தனர்.
சிங்கப்பூரில், சர்வதேச ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான ‘ரவுண்டு–16’ போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோசல் (‘நம்பர்–24’), உலகின் ‘நம்பர்–3’ எகிப்தின் முஸ்தபா அசால் மோதினர். இதில் ஏமாற்றிய சவுரவ் கோசல் 0–3 (3–11, 7–11, 10–21) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரமித் டான்டன், பெருவின் டியாகோ எலியாஸ் மோதினர். இதில் ரமித் டான்டன் 0–3 (3–11, 2–11, 4–11) என்ற கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றினார். இதன்மூலம் இத்தொடரில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது.