டான்டெரிட்: சுவீடனில் ஆண்களுக்கான ஏ.டி.பி., சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது.
இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி, ஆஸ்திரியாவின் மேக்சிமிலியன் நியூகிறிஸ்ட், கஜகஸ்தானின் டெனிஸ் யேவ்சேவ் ஜோடியை எதிர்கொண்டது. இதில் ஜீவன், விஜய் சுந்தர் ஜோடி 6–3, 6–4 என வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ஜெர்மனியின் ஆன்ட்ரி பெகெமன் ஜோடி 1–6, 6–7 என பிரிட்டனின் கேஷ், நெதர்லாந்தின் ஸ்டீவன்ஸ் ஜோடியிடம் தோல்வியடைந்து வெளியேறியது.