பாங்காக்: பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் ஆனார் திராஜ்.
தாய்லாந்தில் ஆசிய கண்டங்களுக்கு இடையிலான பாரிஸ் ஒலிம்பிக் தகுதி வில்வித்தை போட்டி நடக்கிறது. இதன் தனிநபர் ரீகர்வ் பிரிவு காலிறுதியில் 22 வயது இந்திய வீரர் திராஜ் பொம்மதேவரா, ஈரானின் அஷ்ரபியை 6–0 (28–27, 28–25, 28–27) என வென்றார்.
அடுத்து நடந்த அரையிறுதியில் மற்றொரு ஈரான் வீரர் கோல்ஷானியை 6–0 (30–27, 29–25, 29–27) என வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறினார். இதையடுத்து பாரிஸ் ஒலிம்பிக் (2024) போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார்.
பின் நடந்த பைனலில் ஏமாற்றிய திராஜ், 5–6 (29–28, 27–29, 28–28, 30–28, 25–26) என தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. மற்றொரு இந்திய வீரர் தருண்தீப் ராய், காலிறுதியில் தோல்வியடைந்தார்.
பெண்கள் பிரிவில் அன்கிதா பகத், காலிறுதியில் உஸ்பெகிஸ்தானின் அப்டுசட்டோரோவாவை சந்தித்தார். இதன் துவக்கத்தில் 3–1 என முன்னிலை பெற்றார். பின் ஏமாற்றிய அன்கிதா 4–6 (29–23, 27–27, 24–25, 27–27, 24–26) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.