ஹெல்சின்கி: பின்லாந்தில் நடக்கும் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் ஜீவன், விஜய் சுந்தர் ஜோடி முன்னேறியது.
பின்லாந்தின் ஹெல்சின்கி பகுதியில் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் ஜோடி, இத்தாலியின் மார்கோ, ஸ்பெயினின் செர்ஜியோ ஜோடியை எதிர் கொண்டது. முதல் செட்டை 6–1 என வசமாக்கிய இந்திய ஜோடி, அடுத்த செட்டையும் 6–0 என எளிதாக கைப்பற்றியது. முடிவில், ஜீவன், விஜய் சுந்தர் ஜோடி 6–1, 6–0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ஜெர்மனியின் ஆன்ட்ரி ஜோடி 6–7, 6–4, 11–9 என்ற செட் கணக்கில் இத்தாலியின் பெல்லேகிரினோ, வாவோசோரி ஜோடியை வீழ்த்தியது.