ஹெல்சின்கி: ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் ஜீவன், விஜய் சுந்தர் ஜோடி முன்னேறியது.
பின்லாந்தின் ஹெல்சின்கி பகுதியில் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு ‘ரவுண்டு–16’ போட்டியில் இந்தியாவின் ஜீவன், விஜய் சுந்தர் ஜோடி, பின்லாந்தின் லினஸ், எஸ்டோனியாவின் மார்க் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 6–2 என கைப்பற்றிய ஜீவன் ஜோடி, ‘டை பிரேக்கர்’ சென்ற அடுத்த செட்டையும் 7–6 என தனதாக்கியது. முடிவில், 6–2, 7–6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ஜெர்மனியின் ஆன்ட்ரி ஜோடி 6–4, 6–3 என ஆஸ்திரியாவின் மேக்சிமிலியன், டேனிஸ் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
ஒற்றையர் பிரிவு ‘ரவுண்டு–16’ போட்டியில், இந்திய வீரர் சுமித் நாகல் 7–5, 6–2 என செக் குடியரசின் ஜேகப்பை தோற்கடித்தார்.