இஸ்மெய்னிங்: ஜெர்மனி சாலஞ்சர் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ஜெர்மனியின் ஆன்ட்ரூ ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
ஜெர்மனியில் ஆண்களுக்கான சர்வதேச சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடந்தது. இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ஜெர்மனியின் ஆன்ட்ரூ ஜோடி, ஜெர்மனியின் பிரான்ட்ஜென், ஜெபன்ஸ் ஜோடியை சந்தித்தது. உள்ளூர் மண்ணில் பிரான்ட்ஜென் ஜோடி சவால் தந்தது. இருப்பினும், போராடிய பாலாஜி ஜோடி ‘டை பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை 7–6 என வசப்படுத்தியது. அடுத்த செட்டிலும் அசத்திய இவர்கள் 6–4 என கைப்பற்றினர். ஒரு மணி நேரம் 28 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பாலாஜி, ஆன்ட்ரூ ஜோடி 7–6, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டம் கைப்பற்றியது.