புதுடில்லி: ‘ஸ்பீடு’ செஸ் சாம்பியன்ஷிப் காலிறுதியில் இந்தியாவின் நிகால் சரின் தோல்வியடைந்தார்.
‘ஸ்பீடு’ செஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஆன்லைன் வழியாக நடக்கிறது. இந்திய வீரர்கள் குகேஷ், விதித் சந்தோஷ், அர்ஜுன் முதல் சுற்றுடன் திரும்பினர். நேற்று நடந்த காலிறுதி போட்டியில் இந்தியாவின் நிகால் சரின், பிரான்சின் மேக்சிம் வாசியரை எதிர் கொண்டார்.
முதல் மூன்று போட்டியில் இரண்டில் வெற்றி பெற்ற நிகால், 2.0–1.0 என முந்தினார்.
இதன் பின் அடுத்தடுத்த 7 போட்டியில் 1ல் மட்டும் வெற்றி பெற்ற நிகால், மற்ற போட்டிகளில் தோல்வியடைய, 3.0–7.0 என பின்தங்கினார். முடிவில் நிகால் 11.5–19.5 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார்.
மற்றொரு காலிறுதியில் நார்வேயின் கார்ல்சன், ரஷ்யாவின் இயான் நெபோம்னியாட்சியை 20.5–9.5 என்ற கணக்கில் வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார். தவிர அமெரிக்க வீரர்கள் ஹிகாரு நகமுரா, சோ வெஸ்லேயும் காலிறுதியில் வெற்றி பெற்றனர்.