லக்னோ: மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 2,901 பேர் பலியாகினர். 5000க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த சமயத்தில் மொராக்கோ டென்னிஸ் அணி, டேவிஸ் கோப்பை தொடருக்காக இந்தியா வந்துள்ளது. ‘வேர்ல்டு குரூப் 2’ தொடரில் நாளை விளையாட உள்ளது.
மொராக்கோ அணி கேப்டன் மெஹ்தி தாஹிரி கூறுகையில், ‘‘இந்தியாவில் இருந்தாலும் எங்கள் இதயம், ஆன்மா என அனைத்தும் மொராக்கோவில் தான் உள்ளன. இந்த இக்கட்டான சூழலில் நாங்கள் சொந்தமண்ணில் இல்லாததது கடினமாக உள்ளது. மக்கள் தங்கள் குடும்பங்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறோம். துரதிருஷ்டவசமாக இங்கு வர நேரிட்டது. அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம். தரவரிசை அடிப்படையில் இந்தியாவை வெல்ல முடியாது என்றாலும், வெற்றிக்காக போராடுவோம்,’’ என்றார்.