புதுடில்லி: சீனாவில் ஆசிய விளையாட்டு (செப். 23– அக். 8) நடக்கவுள்ளது. இதற்கான கால்பந்து போட்டிகள் செப். 19ல் துவங்குகின்றன. இதற்கான 22 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
அதேநேரம் இந்திய மண்ணில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடர் (செப். 21– மார்ச்) நடக்கும். இதனால் சுனில் செத்ரி, கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து, சந்தேஷ் ஜின்கன் என ‘சீனியர்’ வீரர்களை ஆசிய விளையாட்டில் இந்திய அணிக்காக பங்கேற்க, விடுவிக்க மறுத்து, அணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) தலையிட பிரச்னை முடிவுக்கு வந்தது.
17 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுனில் செத்ரி மட்டும் கேப்டனாக களமிறங்க உள்ளார். கோல்கீப்பர் தீரஜ் சிங், ரஹிம் அலி உள்ளிட்ட சில இளம் நட்சத்திர வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். மற்றபடி அனுபவம் இல்லாத வீரர்களே தேர்வாகி உள்ளனர். இந்திய பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் சீனா செல்வது இன்னும் உறுதியாகவில்லை.
அணி விவரம்: குர்மீத் சிங், தீரஜ் சிங், சுமித், நரேந்தர் கெலாட், அமர்ஜித் சிங், சாமுவேல் ஜேம்ஸ், ராகுல், அப்துல் ரபேஷ், ஆயுஸ் தேவ், பிரைஸ், அபார், ரஹிம் அலி, வின்சி, சுனில் செத்ரி, ரோகித் டாணு, குர்கீரத் சிங், அனிகித்.