லண்டன்: ஊக்கமருந்து விதிகளை மீறிய சிமோனா ஹாலெப்புக்கு நான்கு ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
ருமேனிய டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலெப் 31. முன்னாள் ‘நம்பர்–1’ வீராங்கனை. பிரெஞ்ச் ஓபன் (2018), விம்பிள்டன் (2019) என இரு கிராண்ட்ஸ்லாம் கோப்பை வென்றார். 2022, யு.எஸ்., ஓபன் தொடரில் இவரிடம் ஊக்கமருந்து சோதனை நடந்தது. இதில் தடை செய்யப்பட்ட ‘ராக்ஜடஸ்டாட்’ என்ற மருந்து பயன்படுத்தியது தெரியவர, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஹாலெப்பிற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே வீரர், வீராங்கனைகள் குறித்த மருத்துவ சிகிச்சை உட்பட முழு விவரம் இடம் பெற்றிருக்கும் தனது ‘பயாலஜிகல்’ பாஸ்போர்ட்டில் முறைகேடு செய்ததாக ஹாலெப் மீது மீண்டும் குற்றம் சுமத்தப்பட்டது. இதுகுறித்து விசாரித்த சர்வதேச டென்னிஸ் ஒருங்கிணைப்பு ஏஜென்சி, ஹாலெப்பிற்கு நான்கு ஆண்டு தடை விதித்தது.