கோவை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் அசத்திய ம.பி., அணி கோப்பை வென்றது.
புச்சிபாபு கிரிக்கெட் தொடரின் பைனல் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் ம.பி., அணி 370, டில்லி அணி 201 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ம.பி., அணி 172 ரன்னுக்கு ஆல் அவுட்டாக, டில்லி அணி வெற்றிக்கு 342 ரன் நிர்ணயிக்கப்பட்டன.
இரண்டாம் இன்னிங்சை துவக்கிய டில்லி அணி வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேற, 91 ரன்களுக்கு சுருண்டது. 250 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ம.பி., அணி கோப்பையை கைப்பற்றியது.
ம.பி., அணியின் குல்வந்த் கெஜ்ரோலியா, அதீர் பிரதாப் சிங் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினர்.
இத்தொடரின் சிறந்த பேட்டராக ம.பி.,யின் அனிகெட் வெர்மா, சிறந்த பவுலராக டில்லி அணியின் ரித்திக் ஷோக்கின், சிறந்த ‘ஆல்– ரவுண்டராக’ ம.பி., யின் சுபம் சர்மா தேர்வு செய்யப்பட்டனர்.