கோவை: புச்சிபாபு கிரிக்கெட் பைனலில் ம.பி., அணிமுதல் இன்னிங்சில் 370 ரன் குவித்தது.
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் புச்சிபாபு கிரிக்கெட் பைனல் நடக்கிறது. முதல் நாள் முடிவில் ம.பி., அணி மூன்று விக்கெட்டுக்கு 271 ரன் எடுத்திருந்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் அதீர் பிரதாப் சிங் (9) விரைவில் வெளியேறினார். சதம் கடந்த சுமித் குஷ்வா, 114 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினார். அமன் படோரியா (42) ஆறுதல் அளித்தார். ம.பி., அணி முதல் இன்னிங்சில் 370 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டில்லி அணியின் சித்தாந்த் சர்மா, ரித்திக் ஷோகின், சிவாங்க் வசிஸ்ட் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினர்.
பின் களமிறங்கிய டில்லி அணிக்கு அர்பித் ராணா (11), வைபவ் சர்மா (4) ஏமாற்றினர். ஹிம்மத் சிங் (8), ஜான்டி சித்து (19) நிலைக்கவில்லை. சுமித் மாதுர் (15) காயம் காரணமாக வெளியேறினார். இரண்டாம் நாள் முடிவில், டில்லி அணி முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுக்கு 126 ரன் எடுத்திருந்தது. சிவாங்க் வசிஸ்ட் (44), லக்ஷய் தரேஜா (11) அவுட்டாகாமல் இருந்தனர்.
ம.பி., அணிக்காக ராம்வீர் குர்ஜார் 2 விக்கெட் வீழ்த்தினார்.