கோலாலம்பூர்: மலேசிய பாட்மின்டன் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் சிந்து, பிரனாய், ஸ்ரீகாந்த் முன்னேறினர்.
மலேசியாவில் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் நேற்று இந்தியாவின் சிந்து, ஜப்பானின் அயா ஓஹோரியை எதிர்கொண்டார். முதல் செட்டை சிந்து 21–16 என கைப்பற்றினார். அடுத்த செட்டிலும் அசத்திய சிந்து 21–11 என வென்றார். முடிவில் சிந்து 21–16, 21–11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
ஸ்ரீகாந்த் வெற்றி
ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் உலகின் ‘நம்பர்–7’ வீரர், இந்தியாவின் பிரனாய், சீனாவின் லி ஷிபெங்கை சந்தித்தார். முதல் செட்டை 13–21 என இழந்த பிரனாய், அடுத்த இரு செட்டுகளை 21–16, 21–11 என வசப்படுத்தினார். முடிவில் பிரனாய் 13–21, 21–16, 21–11 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்தியாவின் ஸ்ரீகாந்த், தாய்லாந்தின் விதித்சரணை 21–19, 21–19 என்ற நேர் செட்டுகளில் சாய்த்து காலிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு இந்திய வீரர் லக்சயா சென், ஹாங்காங்கின் லாங் ஆங்கசை சந்தித்தார். இதில் லக்சயா சென் 21–14, 21–19 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.