Advertisement


மும்பை அணி அசத்தல் வெற்றி: வெளியேறியது லக்னோ

மே 24, 2023 22:04
 Comments  
 


IPL 2023, Eliminator, Mumabi Beat Lucknow, Naveen, Green, Akash Madhwal
 

சென்னை: பிரிமியர் கிரிக்கெட் ‘எலிமினேட்டர்’ போட்டியில் அசத்திய மும்பை அணி 81 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பைனலுக்கான வாய்ப்பபை தக்கவைத்துக் கொண்டது. லக்னோ அணி வெளியேறியது.

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் கிரிக்கெட் ‘எலிமினேட்டர்’ போட்டியில், புள்ளிப்பட்டியலில் 3, 4வது இடம் பிடித்த லக்னோ, மும்பை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

 

ரோகித் ஏமாற்றம்: மும்பை அணிக்கு இஷான் கிஷான், ரோகித் சர்மா ஜோடி துவக்கம் தந்தது. குர்னால் பாண்ட்யா வீசிய ஆட்டத்தின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய இஷான் கிஷான், கிருஷ்ணப்பா கவுதம் வீசிய 2வது ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி அடித்தார். குர்னால் வீசிய 3வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ரோகித் (11), நவீன்–உல்–ஹக் பந்தில் அவுட்டானார்.

 

கிரீன் விளாசல்: அடுத்து வந்த கேமிரான் கிரீன், நவீன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி தனது ரன் கணக்கை துவக்கினார். யாஷ் தாகூர் ‘வேகத்தில்’ இஷான் கிஷான் (15) வெளியேறினார். பின் வந்த சூர்யகுமார் யாதவ், யாஷ் தாகூர் பந்தில் ஒரு சிக்சர் விளாசினார். குர்னால் வீசிய 6வது ஓவரில் 3 பவுண்டரி விரட்டினார் கிரீன். ‘பவர்–பிளே’ ஓவரின் முடிவில் மும்பை அணி 62/2 ரன் எடுத்திருந்தது. மோசின் கான் வீசிய 9வது ஓவரில் சூர்யகுமார், கிரீன் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டனர். பொறுப்பாக விளையாடிய சூர்யகுமார், ரவி பிஷ்னோய், நவீன் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்தார்.

 

நவீன் அசத்தல்: மூன்றாவது விக்கெட்டுக்கு 66 ரன் சேர்த்த போது நவீன் பந்தில் சூர்யகுமார் (33) அவுட்டானார். தொடர்ந்து மிரட்டிய நவீன் ‘வேகத்தில்’ கிரீன் (41) போல்டானார். பின் இணைந்த திலக் வர்மா, டிம் டேவிட் ஜோடி நிதானமாக விளையாடியது. பிஷ்னோய், நவீன் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசினார் திலக் வர்மா. ஐந்தாவது விக்கெட்டுக்கு 43 ரன் சேர்த்த போது யாஷ் தாகூர் பந்தில் டிம் டேவிட் (13) அவுட்டானார். நவீன் வீசிய 18வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பினார் நேஹல் வதேரா. இந்த ஓவரின் 3வது பந்தில் திலக் வர்மா (26) ஆட்டமிழந்தார்.

 

மோசின் கான் ‘வேகத்தில்’ கிறிஸ் ஜோர்டான் (4) அவுட்டானார். யாஷ் தாகூர் வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசிய வதேரா (23) கடைசி பந்தில் அவுட்டானார். மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 182 ரன் எடுத்தது. லக்னோ சார்பில் நவீன் 4, யாஷ் தாகூர் 3 விக்கெட் சாய்த்தனர்.

 

மத்வால் அசத்தல்: சவாலான இலக்கை விரட்டிய லக்னோ அணிக்கு, மும்பை பவுலர்கள் தொல்லை தந்தனர். ஆகாஷ் மத்வால் ‘வேகத்தில்’ பிரேரக் மன்கட் (3) அவுட்டானார். ஜோர்டான் பந்தில் கைல் மேயர்ஸ் (18) சரணடைந்தார். பியுஸ் சாவ்லா ‘சுழலில்’ கேப்டன் குர்னால் பாண்ட்யா (8) சிக்கினார். மத்வால் வீசிய 10வது ஓவரில் ஆயுஷ் படோனி (1), நிக்கோலஸ் பூரன் (0) அவுட்டாகினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஸ்டாய்னிஸ் (40) ‘ரன்–அவுட்’ ஆனார். கிருஷ்ணப்பா கவுதம் (2) ஏமாற்றினார். தொடர்ந்து மிரட்டிய மத்வால் பந்தில் ரவி பிஷ்னோய் (3) ஆட்டமிழந்தார். தீபக் ஹூடா (15) ‘ரன்–அவுட்’ ஆனார். மத்வால் ‘வேகத்தில்’ மோசின் கான் (0) போல்டானார்.

 

லக்னோ அணி 16.3 ஓவரில் 101 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. நவீன் (1) அவுட்டாகாமல் இருந்தார். மும்பை சார்பில் மத்வால் 5 விக்கெட் (3.3 ஓவர், 5 ரன்) சாய்த்தார்.

 

குஜராத்துடன் மோதல்

‘எலிமினேட்டர்’ போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணி, நாளை ஆமதாபாத்தில் நடக்கவுள்ள தகுதிச் சுற்று–2ல் ‘நடப்பு சாம்பியன்’ குஜராத் அணியை சந்திக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி, மே 28ல் ஆமதாபாத்தில் நடக்கவுள்ள பைனலில் சென்னை அணியை எதிர்கொள்ளும்.

 

422 ரன்

மும்பை அணியில் அறிமுகமான கேமிரான் கிரீன், 15 போட்டியில், ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 422 ரன் எடுத்துள்ளார். இதன்மூலம் அறிமுக பிரிமியர் லீக் தொடரில் 400 அல்லது அதற்கு மேன் ரன் குவித்த 4வது ஆஸ்திரேலிய வீரரானார்.

 

544 ரன்

இம்முறை அதிக ரன் விளாசிய மும்பை வீரர்கள் வரிசையில் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் உள்ளார். இவர், 15 போட்டியில், ஒரு சதம், 4 அரைசதம் உட்பட 544 ரன் குவித்துள்ளார்.

 

‘ஹாட்ரிக் வைடு’

ஆட்டத்தின் 18வது ஓவரை வீசிய லக்னோ அணியின் நவீன் உல் ஹக், தொடர்ச்சியாக மூன்று ‘வைடு’ வீசினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?