லியான்: லியான் ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி ஜோடி தோல்வியடைந்தது.
பிரான்சில், லியான் ஓபன் ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி ஜோடி, பிரான்சின் நிக்கோலஸ் மஹுட், நெதர்லாந்தின் மாட்வே மிடில்கூப் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 1–6 என இழந்த இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 2–6 எனக் கோட்டைவிட்டது.
முடிவில் பாம்ப்ரி, மைனேனி ஜோடி 1–6, 2–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.