லியான்: லியான் ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி ஜோடி முன்னேறியது.
பிரான்சில், லியான் ஓபன் ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி ஜோடி, கொலம்பியாவின் ஜுவான் செபாஸ்டியன் கபால், ராபர்ட் பராக் ஜோடியை எதிர்கொண்டது.
‘டை பிரேக்கர்’ வரை நீடித்த முதல் செட்டை 7–6 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 3–6 என இழந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் ‘சூப்பர் டை பிரேக்கரில்’ எழுச்சி கண்ட இந்திய ஜோடி 10–8 என தன்வசப்படுத்தியது.
ஒரு மணி நேரம், 53 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய பாம்ப்ரி, மைனேனி ஜோடி 7–6, 3–6, 10–8 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.