புதுடில்லி: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நிதின் குமார், பிரஜ்வல் ஜோடி இரண்டாவது இடம் பிடித்தது.
எத்தியோப்பியாவில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் நிதின்குமார் சின்ஹா, பிரஜ்வல் தேவ் ஜோடி, தென் ஆப்ரிக்காவின் கிறிஸ் வான் விக், எகிப்தின் அக்ரம் எல் சல்லே ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை இந்திய ஜோடி 6–4 என கைப்பற்றியது.
இரண்டாவது செட்டில் சறுக்கிய இந்திய ஜோடி 3–6 என கோட்டை விட்டது. வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘சூப்பர் டைபிரேக்கருக்கு’ சென்றது. இதை இந்திய ஜோடி 10–12 என போராடி இழந்தது. முடிவில் இந்திய ஜோடி 6–4, 3–6, 10–12 என்ற கணக்கில் தோல்வியடைந்து இரண்டாவது இடம் பிடித்தது.