Advertisement


ஊக்கமருந்து சிக்கலில் ஹாலெப்

மே 20, 2023 21:53
 Comments  
 


Simona Halep charged with additional doping offense
 

லண்டன்: ஊக்கமருந்து விதிகளை மீறியதாக ஹாலெப் மீது மீண்டும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ருமேனிய டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலெப் 31. முன்னாள் ‘நம்பர்–1’ வீராங்கனை. பிரெஞ்ச் ஓபன் (2018), விம்பிள்டன் (2019) என இரு கிராண்ட்ஸ்லாம் கோப்பை வென்றார். 2022, யு.எஸ்., ஓபன் தொடரில் இவரிடம் ஊக்கமருந்து சோதனை நடந்தது. இதில் தடை செய்யப்பட்ட ‘ராக்ஜடஸ்டாட்’ என்ற மருந்து பயன்படுத்தியது தெரியவர, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஹாலெப்பிற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

இதனிடையே வீரர், வீராங்கனைகள் குறித்த மருத்துவ சிகிச்சை உட்பட முழு விவரம் இடம் பெற்றிருக்கும் தனது ‘பயாலஜிகல்’ பாஸ்போர்ட்டில் முறைகேடு செய்ததாக ஹாலெப் மீது மீண்டும் குற்றம் சுமத்தப்பட்டது. 

இதுகுறித்து ஹாலெப் கூறுகையில்,‘‘ சர்வதேச டென்னிஸ் ஒருங்கிணைப்பு மையம் என்மீதான குற்றங்களை தவறு என நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும். இது தொடர்பான விசாரணை இரு முறை தாமதம் ஆனது. ஆனால் தொடர்ந்து புகார்களை எதிர்கொண்டு வருகிறேன். இதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. தேவையற்ற மருந்துகளை பயன்படுத்துவது குறித்து ஒருபோதும் நினைக்காத நான், குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க போராடுகிறேன்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?