மொனஸ்டிர்: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஷர்மதா ஜோடி சாம்பியன் ஆனது.
துனிஷியாவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஷர்மதா, மால்டாவின் ஜெனோவெசே ஜோடி, கனடாவின் லுாசி, அமெரிக்காவின் அனா ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை ஷர்மதா ஜோடி 0–6 என எளிதாக இழந்தது. பின் சுதாரித்துக் கொண்ட இந்த ஜோடி அடுத்த செட்டை 6–4 என வசப்படுத்தியது.
வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த ‘சூப்பர் டைபிரேக்கரில்’ ஷர்மதா ஜோடி 11–9 என அசத்தியது. முடிவில் ஷர்மதா ஜோடி 0–6, 6–4, 11–9 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.