புளோரன்ஸ்: டபிள்யு.டி.ஏ., சாலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை அன்கிதா ரெய்னா தோல்வியடைந்தார்.
இத்தாலியில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, இத்தாலியின் சாரா எர்ரானி மோதினர். முதல் செட்டை 6–3 எனக் கைப்பற்றிய அன்கிதா, இரண்டாவது செட்டை 3–6 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் ஏமாற்றிய இவர், 3–6 எனக் கோட்டைவிட்டார்.
இரண்டு மணி நேரம், 30 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய அன்கிதா 6–3, 3–6, 3–6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.