ஆமதாபாத்: பெண்கள் கால்பந்து லீக் போட்டியில் கேரளா அணி 8–2 என ஈஸ்ட் பெங்கால் அணியை வென்றது.
இந்தியாவில் பெண்களுக்கான கால்பந்து லீக் தொடர் (ஐ.டபிள்யு.எல்.,) நேற்று துவங்கியது. மொத்தம் 16 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடம் பெறும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். நேற்று ‘ஏ’ பிரிவு போட்டி நடந்தன.
கோகுலம் கேரளா அணி, ஈஸ்ட் பெங்கால் அணியை சந்தித்தது. இதில் கோல் மழை பொழிந்த கேரளா அணி 8–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மும்பை அணி 1–0 என ககானி அணியை வீழ்த்தியது. ஒடிசா அணி 3–2 என்ற கோல் கணக்கில் ஹாப்ஸ் அணியை வீழ்த்தியது.