புதுடில்லி: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுரேஷ்குமார், சோமானி ஜோடி இரண்டாவது இடம் பெற்றது.
இந்தியாவின் டில்லியில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் மணிஷ் சுரேஷ்குமார், சோமானி ஜோடி, பிலிப்பைன்சின் பிரான்சிஸ், தாய்லாந்தின் இசாரோ ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை இந்திய ஜோடி 2–6 என இழந்தது. தொடர்ந்து ஏமாற்றிய இந்திய ஜோடி அடுத்த செட்டையும் 4–6 என கோட்டை விட்டது. முடிவில் இந்திய ஜோடி 2–6, 4–6 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்து கோப்பை வாய்ப்பை இழந்தது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரஜ்வல் தேவ், 1–6, 4–6 என்ற கணக்கில் சிரியாவின் ஹசேம் நாவிடம் வீழ்ந்தார்.