கிகாலி: ‘பிபா’ தலைவராக மீண்டும் ஜியானி இன்பான்டினோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) தலைவராக சுவிட்சர்லாந்தின் ஜியானி இன்பான்டினோ, 52 இருந்தார். இவர் பொறுப்பேற்றபோது, உறுப்பு நாடுகளுக்கு ஆண்டிற்கு ரூ. 2 கோடி பங்களிப்பாக அளிக்கப்பட்டது. இன்பான்டினோ நிர்வாக செயல்திறன் காரணமாக, தற்போது இது ரூ. 16.55 கோடி தரப்படுகிறது. சமீபத்தில் கத்தாரில் நடந்த உலக கோப்பை தொடர் மூலம், கையிருப்பாக மட்டும் ரூ. 33 ஆயிரம் கோடி உள்ளது. இந்நிலையில், ருவான்டாவில் உறுப்பு நாடுகள் பங்கேற்ற ‘பிபா’ 73வது கூட்டம் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு மீண்டும் இன்பான்டினோ போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 2027 வரை பதவியில் தொடர்வார்.