புடாபெஸ்ட்: ஹங்கேரியில் நடக்கும் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் இந்தியாவின் ராம்குமார், பாகிஸ்தானின் குரோஷி ஜோடி தோல்வியடைந்தது.
ஹங்கேரியில் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ராம்குமார், பாகிஸ்தானின் குரோஷி ஜோடி, துருக்கியின் அகாபிகன், கிர்கின் ஜோடியை எதிர் கொண்டது. இரு ஜோடிகளும் சவால் தர, முதல் செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இதில் ஏமாற்றிய ராம்குமார் ஜோடி 6–7 என போராடி இழந்தது. அடுத்த செட்டிலும் தடுமாறிய இவர்கள் 3–6 என பறிகொடுத்தனர். ஒரு மணி நேரம் 15 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் ராம்குமார், குரோஷி ஜோடி 6–7, 3–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தது.