இந்தியன் வெல்ஸ்: இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு இந்தியாவின் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி முன்னேறியது.
அமெரிக்காவில் ஆண்களுக்கான இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி, கனடாவின் பெலிக்ஸ், டேனிஷ் சபோவலோவ் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 6–4 என கைப்பற்றிய போபண்ணா ஜோடி, அடுத்த செட்டையும் 7–5 என தனதாக்கியது. ஒரு மணி நேரம் 23 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் போபண்ணா, எப்டன் ஜோடி 6–4, 7–5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.