பெங்களூரு: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் அன்கிதா, ருடுஜா போசாலே முன்னேறினர்.
இந்தியாவின் பெங்களூருவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது.
இதன் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, தாய்லாந்தின் லான்லானாவை சந்தித்தார். முதல் செட்டை அன்கிதா 6–2 என கைப்பற்றினார்.
தொடர்ந்து அசத்திய இவர் அடுத்த செட்டை 6–1 என எளிதாக வசப்படுத்தினார்.
முடிவில் அன்கிதா 6–2, 6–1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ருடுஜா போசாலே, லாட்வியாவின் டயானாவை எதிர்கொண்டார். முதல் செட்டை 4–6 என இழந்த ருடுஜா, அடுத்த இரு செட்டுகளை 6–3, 6–2 என வசப்படுத்தினார். முடிவில் ருடுஜா 4–6, 6–3, 6–2 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.