துபாய்: ஐ.சி.சி., ‘டி–20’ பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஸ்னே ராணா முதன் முறையாக 6வது இடம் பெற்றார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், பெண்களுக்கான ‘டி–20’ தரவரிசைப்பட்டியல் (‘ரேங்கிங்’) வெளியிடப்பட்டது. பவுலர்களுக்கான பட்டியலில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஸ்னே ராணா 699 புள்ளி பெற்று 6வது இடத்துக்கு முன்னேறினார். இது இவரது சிறந்த இடமாக அமைந்தது. தீப்தி சர்மா ஒரு இடம் பின்தங்கி மூன்றாவது இடம் (741) பிடித்துள்ளார்.
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா (671) ஒரு இடம் பின்தள்ளப்பட் 8வது இடத்திலுள்ளார். முதலிடத்தில் இங்கிலாந்தின் சோபி (763 புள்ளி) உள்ளார்.
பேட்டர்கள் வரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (722 புள்ளி) மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார். முதலிரண்டு இடங்களில் முறையே ஆஸ்திரேலியாவின் தஹிலியா (803), மூனே (765) உள்ளனர். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை வென்று தந்த, இந்திய அணி கேப்டன் ஷபாலி (623) 8வது இடத்தில் தொடர்கிறார்.