ஜாக்ரெப்: குரோஷிய மல்யுத்த தொடரில் இந்தியாவின் அமன் வெண்கலம் வென்றார்.
குரோஷியாவில் சர்வதேச ஓபன் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் ஆண்களுக்கான 57 கிலோ ‘பிரீஸ்டைல்’ போட்டியில் இந்தியாவின் அமன் ஷெராவத் பங்கேற்றார். காலிறுதியில் ஜார்ஜியாவின் ராபர்ட்டியை 11–8 என வென்ற அமன், அரையிறுதியில் ஜப்பானின் யூடோவிடம் 5–15 என வீழ்ந்தார்.
வெண்கலப் பதக்கத்துக்கான ‘ரெப்பிசேஜ்’ போட்டியில் அமன், அமெரிக்காவின் ரிச்சர்ட்ஸ் ரோட்சை எதிர்கொண்டார். இதில் துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய அமன் 10–4 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.
70 கிலோ பிரிவில் இந்தியாவின் விஷால் காளிரமணா, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அஜர்பெய்ஜானின் காஜியேவை சந்தித்தார். இதில் 0–10 என தோற்று பதக்கத்தை இழந்தார்.