இந்துார்: ஒருநாள் அணிகள் தரவரிசையில் இந்தியா ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது.
இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு முன், ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் ‘டாப்–3’ வரிசையில் நியூசிலாந்து (115), இங்கிலாந்து (113), ஆஸ்திரேலியா (112) அணிகள் இருந்தன. இந்தியா (110) நான்காவதாக இருந்தது.
நியூசிலாந்து தொடரில் முதல் இரு போட்டியில் வென்ற இந்தியா 113 புள்ளிகள் பெற்று, மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. நேற்று ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற இந்தியா, 3–0 என தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இந்தியா 114 புள்ளி பெற்று உலகின் ‘நம்பர்–1’ அணியாக உயர்ந்தது. நியூசிலாந்து (111) நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
‘டாப்–10’ அணிகள் பட்டியல்
அணி புள்ளி
இந்தியா 114
இங்கிலாந்து 113
ஆஸ்திரேலியா 112
நியூசிலாந்து 111
பாகிஸ்தான் 106
தென் ஆப்ரிக்கா 100
வங்கதேசம் 95
இலங்கை 88
ஆப்கானிஸ்தான் 71
வெஸ்ட் இண்டீஸ் 71