சிட்னி: பெண்களுக்கான ‘பிபா’ உலக கோப்பைக்கான, ராட்சத கால்பந்தை ‘ஹெலிகாப்டரில்’ பறக்கவிட்டு வியப்பில் ஆழத்தினர்.
ஆஸ்திரேலியா– நியூசிலாந்து மண்ணில் வரும் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 20 வரை ‘பிபா’ பெண்கள் உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதில் சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட 32 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதற்கான, பிரத்யேக பந்தை ‘அடிடாஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. பந்தில் ‘ஓசியான்ஸ்’ என அச்சிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் நிலப்பரப்பு, நியூசிலாந்தின் மலைகளை இணைந்து குறிக்கும் வகையில் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிமுகவிழாவை வித்தியாசமாக நடத்தினர். ராட்சத கால்பந்தை ‘ஹெலிகாப்டரில்’ தாழ்வாக பறக்கவிட்டனர். சிட்னியில் உள்ள கடலை தாண்டி வந்த பந்து, பின், மார்க்ஸ் பார்க்கில் தயார் செய்யப்பட்டிருந்த பிரத்கேய இடத்தில் பொருத்தப்பட்டது. இதை பல ரசிகர்கள் கண்டு வியந்தனர்.