வாஸ்கோடகாமா: உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான நட்பு கால்பந்தில் இந்திய இளம் அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை (17 வயது) தொடரின் 19 வது சீசன் பைனல் சுற்று தாய்லாந்தில் மே 3–20ல் நடக்கவுள்ளது. மொத்தம் 16 அணிகள் மோதுகின்றன. 2022ல் நடந்த தகுதிச்சுற்றில் அசத்திய இந்திய அணி ஆசிய கோப்பை பைனல் சுற்றுக்கு முன்னேறியது. இதற்குத் தயாராகும் வகையில் கோவாவில் நடந்த நட்பு போட்டியில் வலிமையான உஸ்பெகிஸ்தானை சந்தித்தது.
போட்டி துவங்கிய சில நிமிடத்தில் இந்திய அணி கேப்டன் வன்லால்பெகா கய்டே, முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றுத் தந்தார். 21வது நிமிடத்தில் லால்பெகுலா தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்து கைகொடுத்தார்.
உஸ்பெகிஸ்தான் முயற்சிகளை இந்திய அணி கோல் கீப்பர் சாஹில் சிறப்பாக தடுத்தார். முடிவில் இந்திய அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இன்று நடக்கவுள்ளது.