ஜகார்த்தா: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் சித்தார்த் ராவத் முன்னேறினார்.
இந்தோனேஷியாவில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இத்தொடரின் ‘நம்பர்–4’ அந்தஸ்து பெற்ற இந்தியாவின் சித்தார்த் ராவத், ‘நம்பர்–1’ வீரர் ஆஸ்திரேலியாவின் தாமஸ் ஜானை எதிர்கொண்டார்.
முதல் செட்டை சித்தார்த் 2–6 என இழந்தார். பின் சுதாரித்துக் கொண்ட சித்தார்த் அடுத்த செட்டை ‘டை பிரேக்கர்’ வரை சென்று 7–6 என கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர் அடுத்த செட்டை 6–3 என வசப்படுத்தினார்.
முடிவில் சித்தார்த் 2–6, 7–6, 6–3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறினார். இதில் இன்று பிரான்சின் வெப்பரை சந்திக்கவுள்ளார்.