விஜ்க் ஆன் ஜீ: மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் ஆறாவது சுற்றில் பிரக்ஞானந்தா ‘டிரா’ செய்தார்.
நெதர்லாந்தில் டாடா ஸ்டீஸ் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. உலக சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன், குகேஷ் உட்பட 14 பேர் பங்கேற்கின்றனர்.
போட்டிகள் ‘ரவுண்டு ராபின்’ முறையில் நடக்கிறது. முதல் ஐந்து சுற்றில் 1 வெற்றி, 4 ‘டிரா’ செய்த பிரக்ஞானந்தா, ஆறாவது சுற்றில் உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக்கை எதிர்கொண்டார்.
கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, போட்டியின் 54 வது நகர்த்தலில் ‘டிரா’ செய்தார். அமெரிக்காவின் காருணாவிடம் இந்தியாவின் குகேஷ் வீழ்ந்தார். உலக சாம்பியன் கார்ல்சன், பிரான்சின் ஜோர்டான் மோதிய போட்டி ‘டிரா’ ஆனது. ஆறு சுற்று முடிவில் பிரக்ஞானந்தா (3.5 புள்ளி) ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். நெதர்லாந்தின் அனிஷ் கிரி (4.5), நாடிர்பெக் (4.5) முதல் இரு இடங்களில் உள்ளனர்.