போபால்: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் அன்கிதா ரெய்னா, கர்மான் கவுர் தண்டி முன்னேறினர். இந்தியாவின் போபால் நகரில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, ரஷ்யாவின் மக்லகோவாவை சந்தித்தார்.
முதல் செட்டை 4–6 என இழந்த அன்கிதா, அடுத்த செட்டை ‘டை பிரேக்கர்’ வரை சென்று 7–6 என வசப்படுத்தினார். தொடர்ந்து மூன்றாவது சுற்றில் சிறப்பாக செயல்பட்ட இவர் 6–4 என வென்றார். முடிவில் அன்கிதா 4–6, 7–6, 6–4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் கர்மான் கவுர் தண்டி 6–3, 6–3 என ரஷ்யாவின் குடஷோவாவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.