Advertisement


பார்ல் அணி வெற்றி

ஜனவரி 17, 2023 21:34
 Comments  
 


Paarl Royals team, south africa
 

பார்ல்: டர்பன் அணிக்கு எதிரான தென் ஆப்ரிக்க ‘டி–20’ லீக் போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் பார்ல் அணி வெற்றி பெற்றது. 

தென் ஆப்ரிக்காவில் ஐ.பி.எல்., போன்ற ‘டி–20’ லீக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பார்லில் நடந்த லீக் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ், பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற டர்பன் அணி பவுலிங் தேர்வு செய்தது.

பார்ல் அணிக்கு ஜேசன் ராய் (3) ஏமாற்றினார். பட்லர் (35), விகான் லுாபே (57) ஜொலித்தனர். கேப்டன் டேவிட் மில்லர் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். பார்ல் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. மார்கன் (2), ஜோன்ஸ் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.

டர்பன் அணிக்கு கேப்டன் குயின்டன், பிரிட்டோரியஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி தந்தனர். ஹோல்டர் (17), மகாராஜ் (17) விரைவில் திரும்பினர். கடைசி கட்டத்தில் கிளாசன் அரை சதம் அடித்தும் பலன் இல்லை. டர்பன் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 159 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது. கிளாசன் (56) அவுட்டாகாமல் இருந்தார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?