போபால்: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு ருடுஜா ஜோடி முன்னேறியது.
இந்தியாவின் போபால் நகரில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நேற்று துவங்கியது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ருடுஜா போசாலே, உஸ்பெகிஸ்தானின் நிகிதா ஜோடி, இந்தியாவின் அன்கிதா ரெய்னா, பிரார்த்தனா தாம்ப்ரே ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை ருடுஜா ஜோடி 6–2 என எளிதாக வசப்படுத்தியது. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் ஜொலித்த இந்த ஜோடி 6–4 என கைப்பற்றியது. முடிவில் ருடுஜா ஜோடி 6–2, 6–4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது.
மற்றொரு இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சோகா, சஹாஜா ஜோடி 6–2, 7–6 என்ற நேர் செட்டில் இந்தியாவின் சவுமியா, ஸ்ரேயா ஜோடியை வென்றது.
ஒற்றையரில் அபாரம்
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ருடுஜா போசாலே, இந்தியாவின் பெஹலை 6–1, 6–0 என்ற நேர் செட்டில் எளிதாக வீழ்த்தினார். மற்றொரு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சஹாஜா, ஜப்பானின் எரி சிமிசுவை சந்தித்தார். இதில் சஹாஜா 3–6, 1–6 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.