Advertisement


ஜெர்மனியை சாய்த்தது ஜப்பான்: உலக கால்பந்தில் மீண்டும் அதிர்ச்சி

நவம்பர் 23, 2022 22:39
 Comments  
 


FIFA Football World cup, 2022, Qatar JAPAN beat Germany
 

அல் ரய்யான்: உலக கோப்பை போட்டியில் மீண்டும் அதிர்ச்சி. ஜப்பான் அணி, வலிமையான ஜெர்மனியை 2–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தியது. 

கத்தாரில் நேற்று நடந்த உலக கோப்பை கால்பந்து, ‘இ’ பிரிவு போட்டியில் நான்கு முறை கோப்பை வென்ற, உலகின் ‘நம்பர்–11’ அணியான ஜெர்மனி, 24வது இடத்திலுள்ள ஜப்பானை சந்தித்தது. ஆட்டத்தின் 8வது நிமிடம் ஜப்பான் வீரர் இடோ அடித்த கோல் ‘ஆப் சைடு’ என மறுக்கப்பட்டது. 17 வது நிமிடத்தில் ஜெர்மனியின் ஆன்டனியோ ரூடிகெர் அடித்த பந்து கோல் போஸ்டுக்கு வெளியே சென்றது. 

32வது நிமிடம் டேவிட்டை, ஜப்பான் கோல் கீப்பர் சுச்சி ஹோண்டா பிடித்து இழுக்க, ஜெர்மனிக்கு ‘பெனால்டி’ வாய்ப்பு தரப்பட்டது. இதில் குந்தோகன் கோல் அடிக்க, ஜெர்மனி அணி 1–0 என முன்னிலை பெற்றது. முதல் பாதியின் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் ஹாவெர்ட்ஸ் (45+4 வது) ஒரு கோல் அடித்தார். ‘வி.ஏ.ஆர்.,’ தொழில்நுட்பத்தில் ‘ஆப்சைடு’ என தெரியவர, கோல் மறுக்கப்பட்டது.

இரண்டாவது பாதியில் 60 வது நிமிடம் குந்தோகன் அடித்த பந்து கோல் போஸ்ட் மீது பட்டுத் திரும்ப, ஜெர்மனி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 69 வது நிமிடம் ஜெர்மனி வீரர்கள் அடுத்தடுத்து அடித்த பந்துகளை அசத்தலாக தடுத்தார் ஜப்பான் கோல் கீப்பர் சுச்சி ஹோண்டா. 

ரிட்சு கலக்கல்

71வது நிமிடம் மாற்று வீரராக வந்த ரிட்சு தோவன் ஜப்பான் அணிக்கு திருப்பு முனை ஏற்படுத்தினார். அடுத்த 2வது நிமிடத்தில் ஜெர்மனி கோல்கீப்பர் மானுவல் நியூயர், தகுமி மினாமினோ அடித்த பந்தை தடுத்து வெளியே தள்ளினார். அங்கிருந்த ஜப்பானின் ரிட்சு தோவன், பந்தை திருப்பி அடித்து வலைக்குள் தள்ள, ஸ்கோர் 1–1 என சமன் ஆனது. 

மீண்டும் அபாரம்

போட்டியின் 83 வது நிமிடத்தில் தனி ஒருவனாக பந்தை ஜெர்மனி ஏரியாவுக்குள் கொண்டு சென்றார் ஜப்பானின் டகுமோ அசானோ. அங்கிருந்த ஜெர்மனியின் நிகோவை சமாளித்து, கோல் கீப்பர் மானுவல் நியூயரை ஏமாற்றி கோல் அடித்து மிரட்ட, ஒட்டுமொத்த மைதானமும் அதிர்ந்தது. கடைசியில் 2–1 என வென்றது. ஜெர்மனி அணியின் தொடர்ச்சியான 21 போட்டி வெற்றி நடை முடிவுக்கு வந்தது. 

 

முதன் முறை

உலக கோப்பை போட்டியில் முதல் கோல் விட்டுத் தந்த பின், ஜப்பான் அணி வெற்றி பெற்றதில்லை. நேற்று வரலாற்றை மாற்றிய ஜப்பான் 2–1 என வென்றது. இதற்கு முன் 2 ‘டிரா’ செய்து, 7ல் தோற்று இருந்தது.

 

1958 க்குப் பின்...

உலக கோப்பை தொடரில் 1958ல் ஜெர்மனி அணிக்காக, கார்ல் ஹெய்ன்ஸ் 19 வயது, 72வது நாளில் களமிறங்கினார். தற்போது 64 ஆண்டுக்குப் பின் இளம் வயதில் பங்கேற்ற ஜெர்மனி வீரர் என்ற பெருமை பெற்றார் ஜமால் முஸ்சியலா. நேற்று 19 வயது, 270 நாளில் களமிறங்கினார். தவிர இத்தொடரில் இளம் வீரர் இவர் தான். 

 

அர்ஜென்டினா வழியில்...

சவுதி அரேபியாவுக்கு எதிரான போட்டியில் ‘பெனால்டி’ வாய்ப்பில் மெஸ்சி கோல் அடிக்க, அர்ஜென்டினா முதல் பாதியில் 1–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் எழுச்சி பெற்ற சவுதி அரேபியா, 2 கோல் அடித்து வெற்றி பெற்றது. 

* இதுபோல நேற்று முதல் பாதியில் ‘பெனால்டியில்’ கோல் அடித்து 1–0 என முந்திய ஜெர்மனி, கடைசியில் 1–2 என தோற்றது.

 

மீண்டும் ஏமாற்றம்

கடந்த 2018 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் ஜெர்மனி 0–1 என மெக்சிகோவிடம் வீழ்ந்தது. கடைசியில் லீக் சுற்றுடன் திரும்பியது. இதுபோல, இம்முறை முதல் போட்டியில் ஜப்பானிடம் தோற்றது. 

* 1978ல் முதல் பாதியில் முன்னிலை பெற்ற ஜெர்மனி, 2–3 என ஆஸ்திரியாவிடம் வீழ்ந்தது. 44 ஆண்டுக்குப் பின் தற்போது மீண்டும் அதுபோல முன்னிலை பெற்று, பிறகு தோற்றது. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?