Advertisement


சவுதி வீரருக்கு தீவிர சிகிச்சை

நவம்பர் 23, 2022 22:21
 Comments  
 


Saudi Arabia Yasser Al Sahrani flown to Germany for surgery
 

தோஹா: உலக கோப்பை கால்பந்தில் பலத்த காயமடைந்த சவுதி அரேபிய வீரர் ஷாரானி, சிகிச்சைக்காக ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டார். 

கத்தாரில் 22வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. லுாசெய்ல் மைதானத்தில் நடந்த ‘சி’ பிரிவு லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி(உலக ரேங்கிங்கில் 3வது இடம்), சவுதி அரேபியாவை(51வது இடம்) எதிர்கொண்டது. இதில் சவுதி அரேபிய அணி 2–1 அர்ஜென்டினாவை வென்றது.

 இப்போட்டியின் இரண்டாவது பாதி ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் பந்தை தடுக்க முயன்ற சவுதி கோல்கீப்பர் அல் ஷேக்ரி முழங்கால், சக வீரர் அல் ஷாரானி முகத்தில் தாக்கியது. நிலைகுலைந்து கீழே விழுந்த ஷாரானி, தலை தரையில் பலமாக தாக்கியது. இதில் ஷாரானி தாடை எலும்பு, முக எலும்புகள் உடைந்தன. உடனடியாக தோஹாவில் இருந்து ரியாத் கொண்டு செல்லப்பட்டார்.

பின் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவின் படி, தனி விமானத்தில் ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டார். ரத்த கசிவை தடுக்க, உடனடியாக ஆப்பரேஷன் செய்யப்படுகிறது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?