Advertisement


ஆலிவர் அசத்தல்... பிரான்ஸ் கலக்கல் * ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது

நவம்பர் 23, 2022 22:17
 Comments  
 


FIFA Football World cup, 2022, Qatar, France, Australia
 

அல் வாக்ரா: உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி, 4–1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. ஆலிவர் கிரவுடு இரண்டு கோல் அடித்து அசத்தினார்.

கத்தாரில் ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடரின் 22வது சீசன் நடக்கிறது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கின்றன. ‘டி’ பிரிவில் நடந்த லீக் போட்டியில் இரு முறை சாம்பியன் (1998, 2018) உலகத் தரவரிசையில் 4வது இடத்திலுள்ள பிரான்ஸ், 38 வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணிகள் மோதின. போட்டியின் 9 வது நிமிடம் ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ லெக்கீ அடித்த பந்தை வாங்கிய கிரெக் குட்வின், அப்படியே இடது காலால் வலைக்குள் தள்ள, கோலாக மாறியது. ஆஸ்திரேலிய அணி 1–0 என முன்னிலை பெற்றது. 

ராபியட் அபாரம்

13வது நிமிடம் காயம் காரணமாக பிரான்ஸ் அணியின் லுகாஸ் வெளியேற, உள்ளே வந்த தியோ, அணிக்கு கைகொடுத்தார். 27 வது நிமிடம் தியோ அடித்த பந்தை பிரான்சின் அட்ரியன் ராபியட், தலையால் முட்டி கோலாக மாற்றினார். ஸ்கோர் 1–1 என ஆனது. 32வது நிமிடத்தில் பிரான்ஸ் நட்சத்திர வீரர் எம்பாப்வே, ஆஸ்திரேலிய வீரரை ஏமாற்றி ‘ரிவர்ஸ் பாஸ்’ செய்து கொடுத்த பந்தை பெற்ற ராபியட், அதை ஆலிவர் கிரவுடிடம் தந்தார். பந்தை காலியாக கிடந்த வலைக்குள் தள்ளி கோலாக மாற்றினார் ஆலிவர்.

போட்டியின் 45வது நிமிடத்தில் கிரைஜ்மான் கொடுத்த ‘பாசை’ பெற்ற எம்பாப்வே, எளிதாக கோல் அடிக்கும் வாய்ப்பை வீணடித்து, பந்தை கோல் போஸ்டுக்கு மேலே தள்ளினார். இருப்பினும் முதல் பாதியில் பிரான்ஸ் அணி 2–1 என முன்னிலை பெற்றது. 

ஆலிவர் ‘இரண்டு’

இரண்டாவது பாதியில், போட்டியின் 68 வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் டெம்பெலே கோல் போஸ்ட் நோக்கி பந்தை அடித்தார். அங்கிருந்த எம்பாப்வே, தலையால் இடது பக்கமாக பந்தை திருப்பி கோல் அடித்து அசத்தினார். மீண்டும் அசத்திய எம்பாப்வே, போட்டியின் 71 வது நிமிடம் கைகொடுத்தார். 

இடது காலால் அடித்துக் கொடுத்த பந்தை வாங்கிய ஆலிவர், தலையால் முட்டி கோலாக மாற்றினார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பதிலடி தர எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் பிரான்ஸ் அணி 4–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

 

51

நேற்று இரண்டு கோல் அடித்த ஆலிவர் கிரவுடு, பிரான்ஸ் அணிக்காக அதிக கோல் அடித்த வீரர்களில் முதலிடத்தை, தியரி ஹென்றியுடன் பகிர்ந்து கொண்டார். ஆலிவர், 115 போட்டியில் 51 கோல் அடித்துள்ளார். ஹென்றி 123 போட்டியில் 51 கோல் அடித்துள்ளார். 

 

மிரட்டுவாரா ரொனால்டோ

உலக கோப்பை தொடரில் இன்று, தோஹாவில் நடக்கும் ‘எச்’ பிரிவு போட்டியில் உலகத் தரவரிசையில் 9வது இடத்திலுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி, 61வது இடத்திலுள்ள கானாவை சந்திக்கிறது. 37 வயதான ரொனால்டோவுக்கு இத்தொடர் கடைசியாக இருக்கலாம். 2016ல் யூரோ தொடரில் சாதித்து கொடுத்ததைப் போல, இம்முறை உலக கோப்பை வென்று தருவார் என ரசிகர்கள் நம்புகின்றனர். இதற்கேற்ப இன்று தொடரை வெற்றியுடன் துவக்க காத்திருக்கிறார் ரொனால்டோ.

 

சிக்கலில் இங்கிலாந்து

இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி கேன். கடந்த 2018 தொடரில் 6 கோல் அடித்து ‘கோல்டன் பூட்’ விருது வென்றவர். ஈரானுக்கு எதிரான முதல் போட்டியில் 75 வது நிமிடத்தில் இவரது வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. மறுநாள் சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார். நேற்று பயிற்சியில் களமிறங்காத ஹாரி கேனுக்கு, ‘ஸ்கேன்’ செய்யப்பட்டது. இதனால் இங்கிலாந்து அணியினர், ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?