Advertisement


இந்தியாவிடம் வீழ்ந்தது அமெரிக்கா: உலக செஸ் போட்டியில் அபாரம்

நவம்பர் 23, 2022 21:22
 Comments  
 


FIDE World Team chess championship 2022, India Beat USA, Qualified Quarter Final
 

ஜெருசலேம்: உலக செஸ் தொடரின் ஐந்தாவது சுற்றில் அமெரிக்காவை வீழ்த்திய இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது.

இஸ்ரேலில், அணிகளுக்கு இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்றன. இந்திய அணி, ‘பி’ பிரிவில் போலந்து, அஜர்பெய்ஜான், உஸ்பெகிஸ்தான், அமெரிக்கா, இஸ்ரேல் அணிகளுடன் இடம் பெற்றிருந்தது.

 

இஸ்ரேல், போலந்து அணிகளுக்கு எதிரான முதலிரண்டு சுற்றுகளை ‘டிரா’ செய்த இந்தியா, அஜர்பெய்ஜானுக்கு எதிரான 3வது சுற்றில் வெற்றி பெற்றது. நான்காவது சுற்றில் ஏமாற்றிய இந்தியா, உஸ்பெகிஸ்தானிடம் வீழ்ந்தது.

 

ஐந்தாவது, கடைசி சுற்றில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. இதன் முதல் போட்டியில் இந்தியாவின் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, அமெரிக்காவின் ஹான்ஸ் மோக் நைமானை வீழ்த்தினார். நிகால் சரின் (இந்தியா), அலெக்சாண்டர் ஒனிசுக் (அமெரிக்கா) மோதிய 2வது போட்டி ‘டிரா’ ஆனது. 

மூன்றாவது போட்டியில் அசத்திய இந்தியாவின் நாராயணன், அமெரிக்காவின் அகோபியனை வீழ்த்தினார். சேதுராமன் (இந்தியா), யூனிஸ்கி கியூசாடா பெரெஸ் (அமெரிக்கா) மோதிய 4வது போட்டி ‘டிரா’ ஆனது.

 

முடிவில் இந்தியா 3.0 – 1.0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஐந்து சுற்றுகளின் முடிவில், இரண்டு வெற்றி, இரண்டு ‘டிரா’, ஒரு தோல்வி என, ‘பி’ பிரிவில் 3வது இடம் பிடித்த இந்தியா, காலிறுதிக்கு தகுதி பெற்றது. இதில் பிரான்சை எதிர்கொள்கிறது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?