Advertisement


ஜோகோவிச் ‘சாம்பியன்’

நவம்பர் 21, 2022 21:39
 Comments  
 


ATP Finals Tennis, Novak Djokovic, Champion
 

டுரின்: ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

இத்தாலியில், ஆண்களுக்கான ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நார்வேயின் காஸ்பர் ரூட் மோதினர். முதல் செட்டை 7–5 என போராடி கைப்பற்றிய ஜோகோவிச், இரண்டாவது செட்டை 6–3 என தன்வசப்படுத்தினார்.

 

ஒரு மணி நேரம், 32 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஜோகோவிச் 7–5, 6–3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றார். இது, ஜோகோவிச் 35, கைப்பற்றிய 6வது (2008, 2012, 2013, 2014, 2015, 2022) ஏ.டி.பி., பைனல்ஸ் ஒற்றையர் பட்டம். இதன்மூலம் அதிக முறை ஏ.டி.பி., பைனல்ஸ் ஒற்றையரில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில் முதலிடத்தை சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரருடன் (2003, 2004, 2006, 2007, 2010, 2011) பகிர்ந்து கொண்டார். தவிர இவர், இப்பட்டம் வென்ற அதிக வயதான வீரரானார்.

 

தரவரிசையில் முன்னேற்றம்: ஏ.டி.பி., பைனல்ஸ் தொடரில் கோப்பை வென்ற ஜோகோவிச், ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 8வது இடத்தில் இருந்து ‘நம்பர்–5’ இடத்துக்கு முன்னேறினார். இரண்டாவது இடம் பிடித்த காஸ்பர் ரூட், 4வது இடத்தில் இருந்து ‘நம்பர்–3’ இடத்தை கைப்பற்றினார். முதலிரண்டு இடங்களில் முறையே ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ரபெல் நடால் நீடிக்கின்றனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?