Advertisement


ஈகுவடார் முதல் வெற்றி: கத்தார் அணி ஏமாற்றம்

நவம்பர் 21, 2022 00:09
 Comments  
 


FIFA World Cup Soccer 2022, Ecuador Beat Qatar, Enner Valencia
 

அல் கோர்: உலக கோப்பை கால்பந்து தொடரை ஈகுவடார் அணி வெற்றியுடன் துவக்கியது. லீக் போட்டியில் 2–0 என, வெற்றி பெற்றது.சொந்த மண்ணில் கத்தார் அணியினர் ஏமாற்றினர்.

கத்தாரில், ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து 22வது சீசன் நடக்கிறது. அல் கோரில் உள்ள அல் பேட் மைதானத்தில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் கத்தார், ஈகுவடார் அணிகள் மோதின.

 

ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் ஈகுவடாரின் என்னர் வாலன்சியா தலையால் முட்டி அடித்த கோல் வி.ஏ.ஆர்., (‘வார்’) தொழில்நுட்ப முறையில் பரிசோதிக்கப்பட்டு, ‘ஆப்–சைடு’ என மறுக்கப்பட்டது. பின், 16வது நிமிடத்தில் ஈகுவடாரின் மெண்டெசை ‘பெனால்டி’ ஏரியாவுக்குள் தள்ளிவிட்டு ‘பவுல்’ செய்த கத்தாரின் எல் ஷீப் ‘எல்லோ கார்டு’ பெற்றார். இதனையடுத்து ஈகுவடார் அணிக்கு ‘பெனால்டி’ வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் வாலன்சியா சூப்பராக ஒரு கோல் அடித்தார். இது, இந்த சீசனில் பதிவான முதல் கோல் ஆனது.

 

தொடர்ந்து அசத்திய வாலன்சியா, 31வது நிமிடத்தில் சகவீரர் ஏஞ்சலோ பிரிசியடோ ‘பாஸ்’ செய்த பந்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் கத்தார் வீரர் ஹசன் பந்தை ‘கோல் போஸ்ட்டுக்கு’ மேலே துாக்கி அடித்த வீணடித்தார். முதல் பாதி முடிவில் ஈகுவடார் அணி 2–0 என முன்னிலையில் இருந்தது.

 

சொந்த மண்ணில் கடைசி நிமிடம் வரை போராடிய கத்தார் அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் ஈகுவடார் அணி 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

 

முதன்முறை

இதன்மூலம் உலக கோப்பை தொடரை நடத்தும் நாடு, முதல் போட்டியில் தோல்வியை சந்தித்ததில்லை என்ற வரலாறு மாறியது. கடந்த 2006 முதல், போட்டியை நடத்தும் நாடு, தொடரின் முதல் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் 2018 வரை, போட்டியை நடத்திய நாடுகள் (2006ல் ஜெர்மனி, 2010ல் தென் ஆப்ரிக்கா, 2014ல் பிரேசில், 2018ல் ரஷ்யா) தோல்வியடைந்ததில்லை. நேற்று முதன்முறையாக கத்தார் அணி வீழ்ந்தது.

 

5 கோல்

கத்தார் அணிக்கு எதிராக 2 கோல் அடித்த என்னர் வாலன்சியா, உலக கோப்பை கால்பந்து அரங்கில் அதிக கோல் அடித்த ஈகுவடார் வீரர்கள் வரிசையில் அகஸ்டின் டெல்கடோவை (3 கோல்) முந்தி முதலிடம் பிடித்தார். வாலன்சியா, இதுவரை 5 கோல் அடித்துள்ளார். தவிர இவர், உலக கோப்பை அரங்கில் தொடர்ச்சியாக 5 கோல் அடித்த முதல் தென் அமெரிக்க வீரரானார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?