Advertisement


கத்தாரில் கோலாகல துவக்க விழா: உலக கோப்பை கால்பந்து ஆரம்பம்

நவம்பர் 21, 2022 00:05
 Comments  
 


FIFA World Cup Soccer 2022, Qatar, Opening Ceremony
 

தோஹா: உலக கோப்பை கால்பந்து தொடரின் துவக்க விழா கோலாகலமாக நடந்தது. ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் அரங்கேறிய கண்கவர் வாவேடிக்கை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

கத்தாரில், 22வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. 32 அணிகள், 8 பிரிவாக களமிறங்குகின்றன. 29 நாட்களுக்கு மொத்தம் 64 போட்டிகள் நடக்க உள்ளன. வரும் டிச.18ல் பைனல் நடக்கும்.

 

கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள அல் பெய்த் மைதானத்தில் துவக்க விழா நடந்தது. முந்தைய உலக கோப்பை தீம் பாடல்களின் ‘ரீமிக்ஸ்’ இசைக்கப்பட்டது. கத்தாரின் கலாசாரம், பாரம்பரியம், வரலாற்றை விவரிக்கும் விதத்தில் நிகழ்ச்சிகள் அமைந்தன. பிரான்ஸ் அணியின் முன்னாள் வீரர் மார்சல் டிசெய்லி உலக கோப்பையை ஏந்தி வந்தார். ஹாலிவுட் ஜாம்பவான் நடிகர் மோர்கன் பிரீமேன் ஒற்றுமை பற்றி பேசினார். வாள் சண்டை நடன குழுவினர் அசத்தினர்.தென் கொரிய பாடகர் கிம் ஜாங்–கூக் குழுவினரின் பேண்ட் வாத்திய இசையில் ரசிகர்கள் நனைந்தனர். அமெரிக்காவின் பிளாக்–ஐடு பியாஸ் இசைக்குழுவினர், கொலம்பியாவின் பால்வின், நைஜீரியாவின் பாட்ரிக் நமேகோ ஒகோரி, அமெரிக்காவின் லில் பேபி, பிரிட்டனின் ராபி வில்லியம்ஸ் உட்பட பல முன்னணி பாப் பாடகர்கள் அசத்தினர். பாலிவுட் நடிகை நோரா படேஹி கலக்கல் ஆட்டத்தால் கிறங்கடித்தார். 

 

கத்தார் பாடகர் பகத் அல்–குபாய்சியுடன் சேர்ந்து ஜங்கூக் குழுவினர் அசத்தினர். வண்ணமயமான வாணவேடிக்கை லேசர் ஷோவுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?